Saturday, 23 January 2016
கணணி விளையாட்டு நன்மையானதா தீமையானதா
பிற தளங்களில் கணணி விளையாட்டு பற்றி பல முரண்பாடான எண்ணங்கள் அல்லது ஆய்வுகள் கூட உள்ளன. இவ் ஆய்வுகள் மூலம் நாம் பல விளைவுகள் பற்றியோ அல்லது அதற்கான காரணிகள் பற்றியோ நேர் எதிர் மறை எண்ணங்கள் இருக்கின்றன என எண்ணுகிறேன் . என்னைப் பொறுத்த மட்டில் இதற்கு என்று ஒரு எளிய பதில் இல்லை.வீடியோ விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரத்தினை விளையாடும் நபர் எப்படி செயற்படவேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கின்றான். அனைத்து வீடியோ விளையாட்டுகளும் மோசமான வீடியோ விளையாட்டுகள் அல்ல . நாம் விளையாடும் விளையாட்டு அல்லது அதற்காக ஒதுக்கப்படும் நேரம் அதன் சாதக பதாக தன்மைகளை தீர்மானிக்கின்றது.அளவோடு விளையாட்டும் இடத்து நல்ல பலன்களை நல்கும் என்பது எனது கருத்து.
ஒத்துழைப்பு மற்றும் மற்றவர்களுடன் விளையாடுதல்
கணனி விளையாட்டு விளையாடுபவர்களை பற்றிய மற்றைய நபர்களின் சிந்த்தனை இவ்வாறே இருக்கும்
1.பொதுவாக தனியாக தங்கள் முழு நாளையும் செலவிடுபவர்கள்
2. சமூகவிரோத உள்முக சிந்தனையாளர்
3. பரந்த மனப்பான்மை அற்றவர்
எனினும் இவ்வகை விளையாட்டுக்களில் ஒரு சமூக அனுபவம் உள்ளது. அது பெருமளவில்-மல்டிபிளேயர்-ஆன்லைன் விளையாட்டுகள் (MMOs) உள்ளது .ஏன்னெனில் இதனை பலர் விளையாடுவார்கள் அப்போது ஒரு வீரர் இன்னொரு வீரர் மீது பரஸ்பர கவனம் செலுத்துவர்கள் . இது வேறு எந்த விளையாட்டுகள் போலல்லாது கணணி விளையாட்டில் அதிகமாகவே இருக்கும் .இதுவே பல ஆய்வுகளை வாசித்த பின் நான் அறிந்த உண்மை .ஆய்வுகள் பலவற்றில் வீடியோ விளையாட்டுகளுடன் மற்றைய விளையாட்டுக்களை ஒப்பிடும் இடத்து மனநிலை மற்றும் மன அழுத்தம் குறைவானவர்களாகவும் ,வலுவான உணர்வுகள் உள்ளவர்களாவகும் மேலும் கோபம் குறைந்தவர்களாவகும் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment